தமிழ்நாடு

சென்னை ஆறுகள் ‘அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டன’.. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!

Published

on

சென்னையில் உள்ள எல்லா ஆறுகளும் செத்துவிட்டன எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள நீர் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட முக்கிய ஆறுகள் இருந்தன.

ஆனால் சென்னை நகரமயமாகல் போன்ற காரணங்களாக இதில் அளவுக்கதிகமான மாசு நீர் கலந்து அவை பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கழிவு நீர்களை என்ன தான் சுத்திகரிப்பு செய்து இந்த ஆறுகளில் அனுப்பினால் அவற்றின் நீரின் அளவில் ஆக்ஸிஜன் பூஜ்ஜியமாகத் தான் உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த மூன்று ஆறுகளிலிருந்து 41 இடங்களில் நீரின் மாதிரிகளை எடுத்து 32 விதமான சோதனைகளை நடத்தியுள்ளது.

இவை அனைத்திலும் இந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது என்பது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு அரசு பட்ஜெட்டில் இந்த ஆறுகளைச் சுத்தம் செய்யக் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் அவை பயன்படுத்த முடியாத நிலையிலேயே தொடருவது வருத்தத்துக்குரியதாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version