தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்

Published

on

தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான தூரல் விழும் என்றும், வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்சமாக 34 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரை அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 4செமீ அளவில் மழை பதிவாகி உள்ளது.

தொடர் மழையால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சையில் சம்பா சாகுபடி சுமார் 10 ஏக்கர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியும் நீலகிரி மாவட்டத்தில் காபி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.

சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான தூரலும், பல இடங்களில் பனிப்பொழிவும் ஏற்பட்டன.

Trending

Exit mobile version