தமிழ்நாடு

குடிசைமாற்று வாரிய கட்டிட விவகாரம்: 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்!

Published

on

சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதும் இதற்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடிசை மாற்று வாரிய கட்டிடம் முறைகேடு குறித்து எவ்வளவு விரைவாக விசாரணை நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் அன்பரசன் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, மேலும் சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பை கட்டிய ஒப்பந்ததாரரை பிளாக் லிஸ்டில் சேர்ப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கட்டிட விவகாரம் தொடர்பாக இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த குடிசை மாற்று வாரியம் கட்டிடத்தில் ஈடுபட்டிருந்த உதவி பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தகவலை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத் துறை அமைச்சர் அன்பரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குடிசை மாற்று வாரிய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது என்றும் ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் அவரது பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் தாமோதரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ள நிலையில் அது குறித்த நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது.

Trending

Exit mobile version