தமிழ்நாடு

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை தடை: காவல்துறை ஆணையரின் முக்கிய அறிவிப்பு!

Published

on

சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார்

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சென்னை உள்பட பல நகரங்களில் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இதனையடுத்து தற்போது சென்னையில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, 31.7.2021 நாளிட்ட எண்‌. 491, வருவாய்‌ மற்றும்‌ பேறழிவு மேலாண்மை துறை அரசு ஆணையில்‌, கொரோனா நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌, 31.7.2021 அன்று முதல்‌ 09.08.2021 அன்று காலை 6.00 மணி வரை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளை தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதை கருத்திற்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, உள்‌ அரங்கங்கள்‌ மற்றும்‌ திறந்த
வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை தடை செய்தல்‌ அவசியம்‌ எனக்‌ கருதுகிறேன்‌:

எனவே,சென்னை நகர காவல்‌ சட்டம்‌, 1888 (1888 ஆம்‌ ஆண்டின்‌ தமிழ்நாடு சட்டம்‌ 11) பிரிவு 47 உட்பிரிவு (2) அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்‌ கொண்டு, சென்னை பெருநகர காவல்‌ ஆணையாளர்‌ சங்கர்‌ ஜிவால்‌, இ.கா.ப, ஆகிய நான்‌, பொதுமக்களின்‌ நலன்‌ கருதி, சென்னை பெருநகர காவல்‌ எல்லைக்குட்பட்ட பொது இடங்களில்‌, திறந்த வெளியில்‌ குழுமுதல்‌ / கூட்டங்கள்‌ நடத்துதலை, 34.7.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி முதல்‌ 09.08.2021 அன்று பிற்பகல்‌ 3.00 மணி வரை, ஒரு நாட்கள்‌ உட்பட, தடை விதித்து ஆணையிடுகிறேன்‌.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version