தமிழ்நாடு

சென்னையில் ரூ.103ஐ நெருங்கியது பெட்ரோல் விலை!

Published

on

கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதால் பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பெட்ரோலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் சார்பிலும் அரசியல் கட்சி சார்பிலும் கோரிக்கை விடப்படுகின்றன.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்கப்படாமல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 103ஐ தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 26 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நேற்றைய விலையான ரூபாய் 94.39 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூபாய் 103 நெருங்கியுள்ளது சென்னை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே ரீதியில் சென்றால் பெட்ரோல் விலை இன்னும் ஒரு சில நாட்களில் ரூபாய் 110ஐ தாண்டிவிடும் என அஞ்சப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைக்காத நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைப்போம் என்று கூறிய திமுகவும் குறைக்காமல் இருப்பது பொது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

seithichurul

Trending

Exit mobile version