தமிழ்நாடு

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்வு: முடிவே இல்லையா?

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பின் காரணமாக பெட்ரோல் விலை 104 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து கொண்டே வருவதை அடுத்தே இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை சென்னையில் இன்றும் 31 காசுகள் அதிகரித்து உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 103.92 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டீசல் விலை இன்று 33 காசுகள் அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து டீசல் விலை ஒரு லிட்டர் 99.92 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சென்னையில் பெட்ரோல் விலை 104 ரூபாய்க்கும் டீசல் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லையேல் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Trending

Exit mobile version