தமிழ்நாடு

பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: சைக்கிளுக்கு மாறும் சென்னைவாசிகள்!

Published

on

தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பெட்ரோல் உயர்வு காரணமாக தற்போது சைக்கிளுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

சென்னையில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் தற்போது குறைவாக பயன்படுத்திவிட்டு சைக்கிளில் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் சைக்கிள் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருவதால் சைக்கிள் கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா காலத்தில் உடல் நலத்திற்கும் நல்லது என்பதும் பெட்ரோல் விலையை சமாளிப்பதற்கு சைக்கிள் தான் சரியான வழி என்றும் பல சென்னைவாசிகள் கூறிவருகின்றனர். தற்போது சைக்கிளின் விலை 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை இருக்கும் நிலையில் தங்களுடைய பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு சைக்கிளை தேர்வு செய்யும் ஆர்வத்தில் சென்னை வாசிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவை பொருத்தவரை சைக்கிள்கள் உற்பத்தி தற்போது குறைந்து உள்ளது என்றாலும் சைக்கிளின் தேவை அதிகரித்து வருவதால் வரும் காலங்களில் சைக்கிள் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது

பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடுத்து இனிவரும் காலங்களில் சாலைகளில் இருசக்கர வாகனங்களை விட சைக்கிள்கள் தான் அதிகம் செல்லும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. சாலைகளில் சைக்கிள் செல்லும் நிலை அதிகரித்தால் தமிழ்நாடு மீண்டும் கடந்த 80களை நோக்கி செல்கிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version