தமிழ்நாடு

சென்னையை அச்சுறுத்தும் கனமழை: 2015ஐ விட மோசமாக இருக்கும் என தகவல்!

Published

on

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றிய இருப்பதன் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கம். சேப்பாக்கம். அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் தினமும் அதிக மழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான சாலைகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பதும் தண்ணீர் வடிய வடிய மீண்டும் மீண்டும் மழை பெய்து கொண்டிருப்பதால் தண்ணீர் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் கடந்த நான்கு நாட்களாக இரவு முதல் அதிகாலை வரையிலும் பகலிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் வட சென்னையின் திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துவருகிறது.

அதேபோல ராயபுரம், பாரீஸ், காமராஜர் சாலை, பட்டினம்பாக்கம், மயிலாபூர், சேப்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர், போரூர், நந்தம்பாக்கம், விமானநிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிள் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் அந்த பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version