செய்திகள்
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கீடு….
சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவருக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் எந்தெந்த சமூகத்தினருக்கு ஒதுக்கப்படுள்ளது என்பது தொடர்பான உத்தரவை கூடுதல் முதன்மை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கும் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும், பொதுப்பிரிவு பெண்களுக்கு 84 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. பட்டியலின் பிரிவுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் பட்டியலினத்தவருக்கு மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.