தமிழ்நாடு

சென்னை மாநகர பேருந்துகளில் வருமானத்தை அதிகரிக்க அசத்தலான முடிவு!

Published

on

சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பிற வருவாயை அதிகரிக்கும் விதமாக புதிய முடிவை எடுத்துள்ளனர்.

அண்மையில் சென்னை மெட்ரோ ரயில்களில் தனியார் நிறுவனங்களை விளம்பர செய்ய அனுமதி அளித்ததன் மூலம் அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்தது.

Chennai MTC will soon be allowing private advertisements in Buses

அதையே சென்னை மாநகர பேருந்துகளிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது சென்னை மாநகர பேருந்துகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளின் விளம்பரம் மட்டுமே செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் அதனைத் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விரைவில் சென்னை மாநகர பேருந்துகளில் தனியார் நிறுவன விளம்பரங்களைப் பார்க்கலாம்.

Chennai MTC will soon be allowing private advertisements in Buses

மொத்தம் 1,600 சென்னை மாநகரப் பேருந்துகளில் இந்த தனியார் நிறுவன விளம்பரங்கள் செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்ய மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Chennai MTC will soon be allowing private advertisements in Buses

இதனையடுத்து பேருந்தின் வெளிப்புறம் முழுவதும் தனியார் நிறுவன விளம்பரங்கள் இனி இடம்பெறும்.

Trending

Exit mobile version