தமிழ்நாடு

ஏரிக்கு கீழே 120 அடி ஆழத்தில் சென்னை மெட்ரோ ரயில்.. ஜெர்மனியில் இருந்து வரும் வல்லுனர்கள்!

Published

on

சென்னையில் ஏற்கனவே முதல் கட்ட மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன என்பதும் இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் 2024 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் இயங்க தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலுக்காக சென்னை சேத்துப்பட்டு ஏரியில் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை செய்ய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்து வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சேத்துப்பட்டு ஏரி அருகே சுரங்கப் பாதை அமைக்கும் பணி மிகவும் சவாலானதாக இருக்கிறது என்றும் இந்த பணிக்காக சிங்கப்பூர், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் சுரங்கப் பாதை அமைப்பது குறித்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 120 அடி ஆழத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் அங்கு மெட்ரோ ரயில் பாதை சுரங்க ரயில் பாதை அமைக்கப்படும் என்றும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடையாறு ஆற்றின் கீழ் சென்னை கீழ்பாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகே சேத்துப்பட்டு ஏரியின் கீழ் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளதாகவும் தண்ணீருக்கு கீழே மெட்ரோ சுரங்க பாதை அமைக்கும் போது நீரின் அழுத்தத்திற்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேத்துப்பட்டு ஏரியின் கீழ் 120 அடி ஆழத்தில் இயங்க போகிறது என்ற தகவல் பொது மக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version