தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் மெட்ரோ ரயில் இயக்கம் மீண்டும் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சமீபத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பத்து நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இரு வழிகளிலும் இயக்கப்படும் என அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணிகளின் வேண்டுகோளின்படி இன்று முதல் சனிக்கிழமை வரை காலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு கேட்டுக் கொண்டு உள்ளது.

சென்னையில் கூடுதல் நேரம் மெட்ரோ ரயில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version