தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றம்: முதல் ரயில் எத்தனை மணிக்கு?

Published

on

தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு ஒன்பது மணிக்கு மேல் எந்த வித பயணமும் இருக்க கூடாது என ஊரடங்கு விதி கூறுவதை அடுத்து இரவு 9 மணியுடன் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படும். அதேபோல் அதிகாலை 05.30 மணிக்கு தான் முதல் ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கி வந்த நிலையில் இன்று முதல் 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் அதற்குள் பயணிகள் பயணம் செய்து கொள்ளவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் மெட்ரோ ரயில் இயங்காது என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Trending

Exit mobile version