தமிழ்நாடு

இன்று நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்: அதிரடி அறிவிப்பு

Published

on

சென்னையில் இன்று திடீரென கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதும், அனால் அனைத்து மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் ஆங்காங்கே தவித்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னையில் திடீரென கனமழை பெய்து வருகிறது. மதியம் 2 மணிக்கு ஆரம்பித்த மழை விட்டுவிட்டு தொடர்ச்சியாக பெய்து வருவதால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது என்பதும் சாலைகளில் தண்ணீர் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக சில மணி நேரங்களுக்கு முன்பே சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அலுவலம் முடிந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் இன்று இரவு நள்ளிரவு வரை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளதால் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version