தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மீண்டும் மாற்றம்!

Published

on

கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலான நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மீண்டும் வழக்கமான நேரப்படியே சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது, இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சென்னை மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ ஏற்கனேவே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான அட்டவணையின்‌ படி மெட்ரோ பயணிகளின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌ என்று மெட்ரோ இரயில்‌ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ இரயில்‌ சேவை குறித்து மேலும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாளை சனிக்கிழமை (13.11.2021) முதல்‌ வார நாட்களில்‌ (திங்கள்கிழமை முதல்‌ சனிக்கிழமை வரை; காலை 5:40 மணி முதல்‌ இரவு 11.00 மணி வரை இயக்கப்படும்‌. மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நெரிசல்மிகு நேரங்களில்‌ காலை 8.00 மணி முதல்‌ 11.00 மணி வரையிலும்‌, மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரையிலும்‌ 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும்‌. மற்ற நேரங்களில்‌ 10 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌

மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ அனைத்து ஞாயிற்றுக்கிழமை மற்றும்‌ அரசு பொது விடுமுறை நாட்களில்‌ காலை 7:00 மணி முதல்‌ இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும

இவ்வாறு மெட்ரோ இரயில்‌ நிர்வாகம்‌ செய்தி குறிப்பில்‌ தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காகவும்‌ அனைத்து பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ நுழைவதற்கும்‌ மெட்ரோ இரயில்களில்‌ பயணிப்பதற்கும்‌ அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ சரியாக முகக்கவசம்‌ அணிந்திருப்பதுடன்‌ தனிமனித இடைவெளியைக்‌ கடைபிடித்து பயணம்‌ செய்து சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மெட்ரோ பயணிகளிடம்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

 

seithichurul

Trending

Exit mobile version