தமிழ்நாடு

இன்றும் நாளையும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சூப்பர் சலுகை!

Published

on

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வப்போது மெட்ரோ நிர்வாகம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் 50 சதவீத கட்டண சலுகைகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது இன்றும் நாளையும் தெலுங்கு வருட பிறப்பு மற்றும் தமிழ்வருடப்பிறப்பு வருவதை அடுத்து அதே சலுகையை மீண்டும் சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றும் நாளையும் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று பல சலுகைகளை அவ்வப்போது வழங்க வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் என்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதும், இதில் பயணம் செய்வதால் பயணக்கட்டணம் குறைவாக உள்ளது என்பது மட்டுமின்றி நேரம் மிச்சமாகிறது என்பதும் குறிப்பாக அலுவலகம் செல்பவர்களுக்கும். விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் செல்பவர்களுக்கும் மிகப்பெரிய வசதியாக இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version