தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் இனி டிக்கெட் எடுக்க வேண்டாம்.. இதோ புதிய முறை அமல்!

Published

on

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் இனி காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் சென்னை மெட்ரோ ரயிலில் ஆண்டுக்காண்டு பயணம் செய்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சாலை வழியாக செல்லும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருக்கும் நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில் குறைந்த கட்டணத்தில் சென்றுவிடும் வசதி இருப்பதால் ஏராளமானோர் சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது என்பதும் சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரையிலும், அதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல், கோயம்பேடு மற்றும் விமான நிலையம் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில் இணைப்பதால் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது என்பது பயணிகளுக்கு ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஏற்கனவே பயண அட்டை கியூஆர் முறை உள்பட ஒரு சில வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் டிக்கெட் எடுப்பதற்கு ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த சிக்கலை போக்கும் வகையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் எளிமையாக பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் வசதி சென்னை மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்ய வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே எங்கிருந்து எங்கு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு என தனி வாட்ஸ்அப் எண் வழங்கப்படும் என்றும் அந்த எண்ணுக்கு தங்களுடைய வாட்ஸ்அப் இருந்து ஹாய் என்ன மெசேஜ் அனுப்புவதன் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கிடைக்கும் என்றும் சென்னை மெட்ரோ ரயிலின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வாட்ஸ்அப், ஜிபே, யூபிஐ உள்பட அனைத்து வழிகளிலும் பணம் செலுத்தும் வ்சதி உண்டு என்றும் அதன் பிறகு அதிலுள்ள க்யூஆர் ஸ்கேனர் மட்டும் காண்பித்து எளிமையாக பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளதால் சென்னை ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version