தமிழ்நாடு

15 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் விரைவில் கோடை வெயில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் திடீரென 15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஏற்கனவே மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது என்பதை பார்த்தோம் .

இந்நிலையில் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ஆம் தேதி திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஆகிய 9 மாவட்டங்களிலும் மார்ச் 4-ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

மேலும் டெல்டா மாவட்டங்களில் மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மட்டும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version