தமிழ்நாடு

14 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்றும் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, தேனி உள்பட ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் நாட்டின் இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நாமக்கல், திருச்சி ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும், புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 18ஆம் தேதி வடக்கு, உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு என்றும், அக்டோபர் 19 மற்றும் 20ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரே நேரத்தில் வங்கக் கடல், அரபிக் கடல் ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் நிலை கொண்டுள்ளன சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 17ஆம் தேதி குமரி கடல், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இன்றும் நாளையும் அரபிக்கடல் மாலத்தீவு இலட்சத் தீவு பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும், மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version