தமிழ்நாடு

இன்று 9 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Published

on

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன்னர் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் கனமழை பெய்தது என்பதும் ஜனவரி ஆரம்பத்தில் கூட மழை பெய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version