தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published

on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நாளை தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழையும் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version