தமிழ்நாடு

கரையை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு: எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை?

Published

on

130 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தை நோக்கி மார்ச் மாதத்தில் காற்றழுத்தத் தாழ்வு நெருங்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வால் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது கரையை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திரிகோணமலை வடகிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு கிழக்கு மற்றும் தென் கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் வட தமிழக கரையை நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு கடல் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version