தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை: எச்சரிக்கை அறிவிப்பு!

Published

on

அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் உள்ள மழை நிலவரங்கள் குறித்தும் வானிலை நிலவரங்கள் குறித்தும் அறிவித்து வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவித்து இருந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக கனமழை மூன்று மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்கள் என்றும், இந்த பகுதிகளீல் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஐடி அலுவலகங்கள் உள்பட முக்கிய இந்த மூன்று மாவட்டங்களில் இருப்பதால் மழை எச்சரிக்கை கவனத்தில் கொண்டு அனைவரும் வீட்டிற்கு பத்திரமாக திரும்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது அறிவிப்பின்படி இன்று மாலை 6 மணிக்கு மேல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இந்த மூன்று மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version