தமிழ்நாடு

சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை: 14 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை குறித்த எச்சரிக்கை 14 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அதுமட்டுமின்றி ஓரிரு இடங்களில் சூறாவளி காற்றும் வீச வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் சேலம், புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களிலும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அதாவது அக்டோபர் 20 மற்றும் நாளை மறுநாள் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை,வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி திண்டுக்கல் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 22ஆம் தேதி ற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர், நீலகிரி) மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் )மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அக்டோபர் 23ஆம் தேதி வேலூர் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர் கோயம்புத்தூர், ஈரோடு, கரூர்,திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலவும் என்றும், இரவில் லேசான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version