தமிழ்நாடு

அடுத்த சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் வங்கக்கடலில் அந்தமான் பகுதி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதன் காரணமாகவும் அடுத்த சில மணி நேரங்களில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருநெல்வேலி பகுதிகளிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வடமாவட்டங்கள் ,புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் குறிப்பாக நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அதேபோல் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version