தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் சோழவந்தான், கரூர் மாவட்டம் பாலவிடுதி, கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவாகி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version