தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்

Published

on

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது அறிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது

நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 10 மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்படுகிறது

மேலும் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகஸ்ட் 11ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒரு சில உள் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version