தமிழ்நாடு

4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி, பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை, தேனி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் திண்டுக்கல், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் விருதுநகர் தர்மபுரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவித்துள்ளது.

ஜூலை 26, 27இல் சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version