தமிழ்நாடு

செப்.19ல் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்றும் செப்டம்பர் 19-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் மேலும் கூறியதாவது:

செப்டம்பர் 17ஆம் தேதி அதாவது இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யும்.

அதேபோல் நாளை அதாவது செப்டம்பர் 18-ம் தேதி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள் மற்றும் காரைக்கால்பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும் பெய்யும்.

செப்டம்பர் 19-ம் தேதி வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமுதல் மிகக் கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.
என்றும் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version