தமிழ்நாடு

7 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம்!

Published

on

இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

மேலும் குமரி கடல் பகுதியில் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நேற்று மிதமான மழை பெய்தது என்றும் இன்று தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version