தமிழ்நாடு

இன்று 5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் மழை நிலவரங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது என்பதும் அந்த அறிவிப்பின்படி தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இந்த ஐந்து மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கும் நல்ல மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் அதேபோல் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வட மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version