தமிழ்நாடு

அடுத்த 5 நாட்கள் கொட்டப்போகிறது மழை: இந்த 4 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜாக்கிரதை!

Published

on

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது என்பதும் அதுமட்டுமின்றி வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும். 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சற்று முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கோவை, தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டத்தினர் அடுத்த 5 நாட்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை இன்று மிதமான மழை பெய்யும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version