தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது மழை குறித்த விவரங்களை தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாவட்டங்கள் கடலூர் மயிலாடுதுறை அரியலூர் ஆகிய மாவட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலூர் திருவள்ளூர் ராணிப்பேட்டை சேலம் ஈரோடு நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சென்னையின் ஒருசில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

அதேபோல் நேற்று சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு வெளுத்து வாங்கிய மழை காரணமாக சாலைகளில் மழைநீர் வழிந்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version