தமிழ்நாடு

தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மூடுபனி: வானிலை எச்சரிக்கை!

Published

on

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடுமையான மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் டிசம்பர் மாத இறுதியில் திடீரென சென்னையில் உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் தெரிந்ததே.

இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மழை இல்லை என்றாலும் கடுமையான பனி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தமிழகத்தில் மூன்று நாட்கள் மூடுபனி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 4, 5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வறண்ட நிலை காணப்படும் என்றும் ஜனவரி 6ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் மூடுபனி காணப்படும் என்றும் எனவே அந்த பகுதியில் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்னும் இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 4ஆம் தேதி குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 5-ம் தேதியும் குமரிக்கடல் மட்டும் மன்னார்குடி பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் அன்றைய தினம் மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்க செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version