தமிழ்நாடு

இன்று முதல் ஜூலை 2 வரை எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம்!

Published

on

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 29ஆம் தேதி அதாவது நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

Trending

Exit mobile version