தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகும் கனமழை: வானிலை அறிவிப்பு

Published

on

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அக்னி நட்சத்திர வெயில் முடிந்து விட்டாலும் கூட தற்போதும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து கூறியிருப்பதாவது:

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version