தமிழ்நாடு

14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மழை குறித்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சற்றுமுன் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது.

மேலும் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் ஜூலை 4ஆம் தேதி சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை 5ஆம் தேதி சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், ஜூலை 6ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், தமிழ்நாட்டில் இதர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதிகள் ஜூலை 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version