தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published

on

வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தினந்தோறும் மழை நிலவரம் குறித்த தகவலை வெளியிட்டு வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்னர் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளதால் மேற்கண்ட 10 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னையில் தற்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது, குறிப்பாக சென்னையில் திருவில்லிக்கேணி, சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, வடபழனி, சாலிகிராமம், அடையாறு, நந்தனம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

மேலும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Trending

Exit mobile version