தமிழ்நாடு

எச்சரிக்கை மக்களே: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை

Published

on

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் தெற்கு கடலோரம், ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை ஜூலை 18ஆம் தேதி தென்காசி, திண்டுக்கல், சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூலை 19ஆம் தேதி கோவை, தேனி, நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய பகுதிகளீல் மிதமான மழை வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version