தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் தட்பவெப்ப நிலை மற்றும் மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அறிவித்து வருகிறது என்பதும். அதன்படி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. காற்றின் திசைவேகம் மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை நாளை ஜூலை 6ஆம் தேதி மற்றும் நாளை மறுதினம் ஜூலை 7ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னையின் ஓரிரு இடங்களில் லேசான மழை மட்டுமே பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே .

Trending

Exit mobile version