தமிழ்நாடு

5 நாட்களுக்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வபோது அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை அறிவிப்பு குறித்து சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு என்றும், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் ஜூலை 4-ஆம் தேதி அதாவது நாளை சேலம், விழுப்புரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, தேனி, கோவை, மதுரை, ஈரோடு ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் ஜூலை 5 முதல் 7 ஆம் தேதி வரை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Trending

Exit mobile version