தமிழ்நாடு

கோடையில் இடி மின்னலுடன் மழையா? வானிலை அறிவிப்பால் மக்கள் ஆச்சரியம்

Published

on

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்த தொடங்கும் நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இன்று அதாவது மார்ச் 23ஆம் தேதி தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 24 மற்றும் நாளை மறுநாள் மார்ச் 25ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Trending

Exit mobile version