தமிழ்நாடு

8 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அந்த மாவட்டங்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தேனி, திருவண்ணாமலை, சேலம், மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஈரோடு, தேனி மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் முதல் வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மேலும் அதே நாளில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 29 இல் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, சேலம், ஈரோடு, தர்மபுரி பகுதியிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version