தமிழ்நாடு

3 நாட்கள் தொடர்மழை, 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மூன்று நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்றும் அக்டோபர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது

காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், அரியலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சேலம் திருவண்ணாமலை கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 8ஆம் தேதி வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 6ஆம் தேதி நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அக்டோபர் 7ஆம் தேதி வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் மற்றும் ஒருசில தென்மாவட்டங்களிலும், அக்டோபர் 8ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அக்டோபர் 9ஆம் தேதியன்று, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் எனவும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Trending

Exit mobile version