தமிழ்நாடு

5 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தினந்தோறும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை சென்னையில் நல்ல மழை பெய்தது என்பதும், இதனை அடுத்து சாலையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் சென்னையிலும் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று ஐந்து மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக கன மழை பெய்ய வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version