தமிழ்நாடு

இன்னும் 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Published

on

சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடிநீர் ஆதாரங்கள் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்து 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை காலையில் அனைவரும் பணிக்கு செல்லும் மும்முரத்தில் இருக்கும் நிலையில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளிவந்ததால் பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version