தமிழ்நாடு

கோடை தொடங்கிவிட்ட நிலையில் மழை அறிவிப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

Published

on

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில் மழை குறித்த அறிவிப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் கடுமையான கோடை வெயில் அடிக்கும் நிலையில் தற்போது கோடை காலம் போல் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மார்ச் 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்களும் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஆனால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் அதனால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version