தமிழ்நாடு

இன்று முதல் 3 நாட்களுக்கு மழை: குடையுடன் வெளியே செல்ல அறிவுறுத்தல்!

Published

on

இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் மார்ச் மாதத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் .

இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பூமத்தியரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மார்ச் 12 முதல் 14 வரை மிதமான மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வெளியே செல்லும் பொதுமக்கள் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

Trending

Exit mobile version