தமிழ்நாடு

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இருப்பினும் கனமழை எச்சரிக்கை!

Published

on

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி இருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த வலுவிழப்பு என்பது நிகந்திருக்கிறது .

இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குத் திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வழிவகுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக தற்போது விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்,சி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பரவலாக மழை காணப்படும் என்றும் சென்னையை அடுத்த 48 மணி நேரத்தில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல் திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 35 முதல் 45 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், எனவே தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version