தமிழ்நாடு

24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published

on

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்களுக்கு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்றுமுன் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை ஆகிய 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதே போல் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை ஆகஸ்ட் 11ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Trending

Exit mobile version